நாடோடிக்காத்து: மலையாளத் திரைப்படம்

Explore "Nadodikattu," a Malayalam film highlighting resilience. It portrays friends facing hardship who find success through perseverance and unexpected paths.

P
Parathan Thiyagalingam
December 30, 20252 min read
நாடோடிக்காத்து: மலையாளத் திரைப்படம்

இனிய வணக்கம்,

இன்றுடன் 2025 க்கு நன்றிகள் சொல்லி விடையனுப்பும் நாள். ஆண்டின் இறுதி நாள், சற்றே ஓய்வாக இந்த ஆண்டில் நான் செய்தது, இந்த ஆண்டு எனக்கு செய்தது என அசைபோடலாமென நினைக்கும் போது யுடியூப்பில் "மலையாளிகளின் வெற்றிக்கு என்ன காரணம்" என ஒருவர் வீடியோ போட்டிருந்தார். முழுதாகப் பார்த்தேன், வீடியோவுக்கான கமெண்டுகளும் வாசித்துக் கொண்டு வந்தேன். அப்போது வெவ்வேறு விதமான காரணங்களை அடுக்கிக் கொண்டு வந்தார்கள். ஈழத்தில் குறிப்பாக புலம்பெயர்ந்து அந் நாட்டின் கலாச்சாரம், பண்பாடுகளைப் பேணிக் கொண்டு தமிழைப் பாதுகாக்கவும் எடுக்கும் பிரயத்தனங்கள், சவால்கள் ஆயிரம் ஆயிரம். கிட்டத்தட்ட மலையாளிகளும், யாழ்ப்பாணத் தமிழர்க்கும் பெரிதாக வேறுபாடுகளைப் பார்க்க மாட்டீர்கள். போகும் இடத்தில் நம் ஊர்க் காரன் இருக்கிறானா என்பதும், புட்டு தேசிய உணவாகக் கருதுவதும் மிகப் பலம் சேர்க்கும் விடயங்கள் ஆகும். சரி, அதை விடுவோம் அதில் ஒரு கமெண்ட் இருந்தது "ஶ்ரீனிவாசனின் திரைப்படங்கள் கற்றுத்தந்த பாடங்கள் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் எவ்வாறு கையாள வேண்டும்" என்று, அதற்கு விடியோ தயாரித்தவரும் "ஶ்ரீனிவாசன் ஒரு தலைமுறையையே சிந்திக்க வைத்து தன்னைத்தானே விமர்சிக்கவும் அதனைக் கையாளவும் கற்றுக் கொடுத்தார்" என்று.

அவரின் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் படங்கள் பார்த்து இருக்கிறேன் அதைவிட லேசா லேசா படத்தில் வரும் அவரது பாகங்கள் ஆஹா தான். இதைத்தவிர்த்து அவர் மலையாள சினிமாவின் சிறந்த கதாசிரியர், நடிகர் என்றூ அறிந்து வைத்திருக்கிறேன். கடந்த கிழமை அவர் இறந்தார் என்ற செய்தியும் படித்திருந்தேன்.

இப்படியாக ஒரு சின்ன prompt ஐ போட்டு சட் ஜிபிடியிடம் கேட்கும் போது ஶ்ரீனிவாசனின் அவ்வாறன படங்களில் நாடோடிக்காத்து படம் போட்டிருந்தது. இந்தப் படப் பெயர் பரீட்சயமானது ஏனென்றால் "வைசாக சந்யே" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் - மோகன்லால், ஷோபனா நடித்தது. ப்ரேமம் பார்த்த புதிதில் மலையாளப் பாடல்கள் தேடித் தேடிக் கேட்டிருக்கிறேன் அவற்றில் இந்தப் பாடல் மிக முக்கியமானது.

படக்கதை இதுதான்: 'B Com First Class' எடுத்த மோகன்லாலும், அதிகம் படித்திராத அவரது நண்பன் ஶ்ரீனிவாசனைச் சுற்றிய கதை. அவர்களின் முதல் வேலை ஓர் நிறுவனத்தில் பியூன், அதிலிருந்து துரத்தப்பட்டுப் பின்னர் மாடுகளை வளர்த்து அதன் மூலம் முன்னேற முயற்சிக்கிறார்கள் அதுவும் சரிவர அமையவில்லை. (இங்கு தான் மோகன்லால் தான் படித்திருக்கிறேன் மாடு வரர்க்கவா என்பதை சொல்கிறார் ஆனால் அதையும் செய்கிறார்.)

இனி ஊரிலிருந்து பிரயோசனமில்லை என்று துபாய்க்கு கள்ளக் கப்பலில் பயணிக்கிறார்கள், ஆனால் ஏமாற்றப்படுகிறார்கள். பக்கத்து மாநிலம் தமிழ்நாட்டில் இறக்கப்படுகிறார்கள். பின்னர் அங்கும் சில பல பிரச்சனைகள் என்று ஏழ்மையாகவே, பசி பட்டினியுடன் வாழ்கிறார்கள். ஆனாலும் காய்கறி விற்கிறார் ரோடு ரோடாக, இடையில் சோபனாவுடனான காதல் - ஆஹா சோபனா என்ன அழகு.

இறுதியில் நண்பர்கள் இருவரும் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்.

சுபம்.....

87 ல் வந்த படத்துக்கு பூரா கதையும் எழுதணூம்னு எதிர்பார்க்கிறது தப்பு. ஆங்கிலம் என்றாலும் சட் ஜிபிடியில் எழுதிவிடுவேன் தமிழில் நான் தட்டச்சு செய்ய வேண்டும் என்பதால் இதுவரை போதும்.

இந்தப் படத்தின் கதை ஶ்ரீனிவாசன் அவர்களின் கதை. இது போல பல படங்கள் இருக்கிறதாம். ஒவ்வொன்றாய் பார்க்க ஆசை தான் பார்க்கலாம்.

அழகான பல கதைகளைத் தந்த ஶ்ரீனிவாசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.